ஜூலை-8 புனித கீலியன்


பிறப்பு:

சுமார்.640, முல்லாக் அருகில் கிளஃப் பாலிபெக், கவுண்டி கேவன், அயர்லாந்து.

இறப்பு:

ஜூலை 8, 689, வுர்ஸ்பர்க், ஜெர்மனி. தலை துண்டிக்கப்பட்டு மரணம்.

ஏற்கும் சபை/சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை,

கிழக்கு மரபுவழி திருச்சபை.

பாதுகாவல்:

வாத நோயயினால் பாதிக்கப்பட்டவர்கள்�; பவேரியா, ஜெர்மனி; பேடர்பார்ன் உயர்மறைமாவட்டம், ஜெர்மனி; வுர்ஸ்பர்க் மறைமாவட்டம், ஜெர்மனி.

சித்தரிப்பு:

ஆயர்களின் வட்ட தொப்பியுடன் வாள் பயன்படுத்துவதாய்; இரண்டு குருக்களுடன், ஆயரும் கொலை செய்யப்படுவதாய்.

இவர் 687ம் ஆண்டில் மிகச் சிறந்த ஆயர் என்ற பெருமையைப் பெற்றார். வுர்ஸ்பர்க் மக்களிடையே இவரின் பெயரில் தனிப்பட்ட நம்பிக்கை வளர்ந்தது. 689ம் ஆண்டுக் கெய்லானா என்ற நாட்டைச் சார்ந்த ஓர் அரசன், இனத்தின் பெயரால், ஆயர் புனித கீலியன் கொலைச் செய்யத் திட்டமிட்டான். அவருடன் இணைந்துப் பணிபுரிந்தக் குருக்கள் கோலோண்ட் மற்றும் டோஃப்னன் இருவரும் முதலில் கொல்லப்பட்டார்கள்.

�நற்செய்திக்குச் சான்றுப் பகரும் விதமாக இருவரும் மறைசாட்சியானார்கள்.

புனித கீலியன் அவர்களின் செப வாழ்வினால் அரச குடும்பத்தினர் தூண்டப்பட்டு, வுர்ஸ்பர்க் வந்து, ஆயரிடம் திருமுழுக்குப் பெற்று மனந்திரும்பினர். பாவமன்னிப்புப் பெற்று இறைவனை நம்பினர். ஆனால் அரசனின் படையைச் சேர்ந்தவர்கள், அரசருக்குத் தெரியாமலேயே ஆயர் புனித கீலியனை கொன்றார்கள்.

புனித கீலியன் பெயரில் வர்ஸ்பர்க்கில் ஓர் ஆலயம் உள்ளது. பல வருடங்களாக இவ்வாலயம் புனிதத் தலமாக இருந்தது. அங்குள்ள கிரிப்தா என்ற சிற்றாலயத்தில் குருக்கள் கோலோண்ட் மற்றும் டோஃப்னன் மற்றும் புனித கீலியன் கல்லறைகள் உள்ளன. உலகப் போரில் இப்பேராலயமானது அழிவுக்குள்ளாகப்பட்டதால், 1910ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நியூமன்ஸ்டர் பேராலயம் என்று அழைக்கப்படுகிறது.

புனித கீலியன் ஆயராக இருந்தபோது பயன்படுத்திய, தலையில் வைக்கும் தொப்பியும், கையில் பிடிக்கும் நீண்ட பெரிய சிலுவையும் பாதுகாக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றும் சில பொருட்களும், திருவிவிலியம் மைன்ஸ் என்ற மறைமாவட்டத்திற்குச் சொந்தமான நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது.