ஜூலை 19 புனிதர் இளைய மேக்ரினா St. Macrina the Younger


அருட்சகோதரி: (Nun)

பிறப்பு: கி.பி. 330 சேசரா, கப்படோசியா, துருக்கி (Caesarea, Cappadocia, Turkey)

இறப்பு: ஜூலை 19, 379 போன்டஸ் (Pontus)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) 

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

லூதரன் திருச்சபை (Lutheranism)

நினைவுத் திருநாள்: ஜூலை 19

புனிதர் இளைய மேக்ரினா, ஆதிகால கிறிஸ்தவ திருச்சபைகளின் (Early Christian Church) அருட்சகோதரியும், முக்கியமான புனிதருமாவார். இவரது உடன் பிறந்த இளைய சகோதரரான “புனிதர் கிரகோரி” (Saint Gregory of Nyssa) இவரைப் பற்றி எழுதுகையில், கன்னித்தன்மையைப் போற்றும் இவரது தீவிரம் பற்றியும், பொதுவாக மத காரணங்களுக்காக, கடுமையான சுய ஒழுக்கம் மற்றும் அனைத்து விதமான இவ்வுலக விருப்பங்கள் மற்றும் பழக்கவழக்கங்களையும் தவிர்த்து வாழ்ந்தவர் என எழுதிவைத்தார்.

துருக்கி (Turkey) நாட்டின் “கப்படோசியா” (Cappadocia) பிராந்தியத்தின் “சேசரா” (Caesarea) எனும் பெரிய நகரில் பிறந்த இவரது தந்தையார், “மூத்த பாசில்” (Basil the Elder) ஆவார். தாயாரின் பெயர், “எம்மெலியா” (Emmelia) ஆகும். புனிதர் “மூத்த மேக்ரினா” (Saint Macrina the Elder) இவரது பாட்டி ஆவார். இவருடன் உடன்பிறந்த ஒன்பது சகோதரர்களுள் இருவரான, புனிதர் “பெரிய பாசில்” (Basil the Great) மற்றும் புனிதர் “கிரகோரி” (Saint Gregory of Nyssa) ஆகியோர், “கப்படோசிய தந்தையர்” (Cappadocian Fathers) என்று அழைக்கப்படும் மூவரில் இருவர் ஆவர். புனிதர் “பீட்டர்” (Peter of Sebaste) மற்றும் பிரபல கிறிஸ்தவ நீதிபதியான புனிதர் “நவ்கிரேஷியஸ்” (Naucratius) ஆகியோரும் இவரது சகோதரர்கள் ஆவர்.

அவரது தந்தை அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் அவரது வருங்கால கணவர், திருமணத்திற்கு முன் இறந்து போனார். ஒருவருடன் திருமண உறுதி செய்துகொண்டதன் பிறகு, மற்றொரு மனிதரை திருமணம் செய்வது பொருத்தமானது என்று மேக்ரினா நம்பவில்லை. ஆனால், கிறிஸ்துவையே தமது நித்திய மணமகனாக ஏற்றுக்கொண்டார். அதற்கு பதிலாக, அவர் தனது மதத்திற்கு தன்னை அர்ப்பணித்து, ஒரு கன்னியாஸ்திரியாக மாறினார்.

மேக்ரினா, தனது சகோதரர்கள் மற்றும் தமது தாயின் மீது, “ஆன்மீக இலக்குகளை அடைய வேண்டுமென்ற நோக்கத்திற்காக, சிற்றின்ப இன்பமயங்களில் இருந்து விலகுவதால் குணப்படுத்தப்படும் துறவற வாழ்க்கைக்கான” (Ascetic Ideal) ஒரு ஆழ்ந்த செல்வாக்கு கொண்டிருந்தார்.

இவரது சகோதரர் “கிரகோரி” (Gregory of Nyssa), “மேக்ரினாவின் வாழ்க்கை” (Life of Macrina) எனும் பெயரில் எழுதிய சரிதத்தில், இவரது வாழ்க்கை முழுதும் இவர் கடைபிடித்த அருளுடைமை அல்லது புனிதம் பற்றி எழுதியிருந்தார். ஒரு சாந்தமான, பணிவான மற்றும் எளிய வாழ்க்கை வாழ்ந்த மேக்ரினா, தமது நேரத்தை செபிப்பதிலும், தமது இளைய சகோதரர் பீட்டருக்கு ஆன்மீக கல்வி பயிற்றுவதிலுமே செலவிட்டார். இவரது மூத்த சகோதரர் கிரகோரி இவருக்கு கற்பித்த பண்டைய கலாச்சார கல்வி அனைத்தையும் முழு மனதுடன் நிராகரித்த மேக்ரினா, வேதாகமம் மற்றும் பிற புனித நூல்களின் அர்ப்பணிப்பு ஆய்வுகளைத் தேர்ந்தெடுத்து கற்றார்.

கருங்கடலின் (Black Sea) தென்கரையோரமுள்ள வரலாற்று ஸ்தலமான “போன்டஸ்” (Pontus) எனுமிடத்திலுள்ள தமது குடும்ப தோட்டத்தை தமது இளைய சகோதரர் பீட்டரின் உதவியுடன் ஒரு துறவற மடாலயமாகவும் பள்ளியாகவும் மாற்றியமைத்து அங்கேயே வாழ்ந்திருந்த மேக்ரினா, 379ம் ஆண்டு, ஜூலை மாதம், 19ம் நாளன்று மரித்தார். தமது மரண படுக்கையிலும் கூட, புனிதமான வாழ்க்கையைத் தொடர்ந்த மேக்ரினா, படுக்கையை வெறுத்து வெறும் தரையிலேயே படுத்தார். புனிதர் மேக்ரினா, ஒரு புனிதமான கிறிஸ்தவ பெண்மணியாக இருப்பதற்கான தரங்களை நிர்ணயிக்க முடிந்தது. கன்னித்தன்மை, "கடவுளுடைய பிரகாசமான தூய்மையை” (Radiant Purity of God) பிரதிபலிக்கிறது என்பதை அவர் நம்பினார்.