ஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித பீட்டர்


பிறப்பு: ரோம்.

இறப்பு: கி.பி. 304, ரோம் நகர் அருகில், இத்தாலி.

புனிதர்கள் மார்செலினஸ் மற்றும் பீட்டர் கல்லறை, லாவிகன் சாலை, ரோம் நகரில் லூசிலா மற்றும் ஃபிர்மினா ஆகியோரால் அடக்கம் செய்யப்பட்டது.

கான்ஸ்டன்டைன், கல்லறையின்மீது திருத்தல ஆலயம் கட்டினார்.

பிற்காலத்தில், சார்லமேனின் செயலாளர்  ஐன்ஹார்ட்டால் செல்ஜென்ஸ்டாட் மடாலயத்திற்கு மீபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

(1665ம் ஆண்டு, புனித டெனிஸ் மடாலயத்தில் பொதியப்பட்ட புனித பீட்டரின் மண்டை ஓடு மற்றும் மீபொருட்கள், 1794ம் ஆண்டு அழிக்கப்பட்டன.)

ஏற்கும் சபை/சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

கிழக்கு மரபுவழி திருச்சபை

முக்கிய திருத்தலங்கள்:

புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ஆலயம், ரோம், இத்தாலி.

கிரெமோனா பேராலயம், கிரெமோனா, இத்தாலி.

செலிகென்ஸ்டாட், ஜெர்மனி.

சித்தரிப்பு:

கையில் கிரீடங்களுடன் மழித்த தலையுடன் இருவர்; பனை ஓலையுடன் தியாகிகள்; புனித போலியோவுடன்.

மார்செலினஸ் மற்றும் பீட்டர் இவரும் சமகாலத்தவர். மார்செலினசோ குருவானவர். பீட்டரோ தீயஆவியை விரட்டக்கூடிய வல்லமைப் படைத்தவர்.

ஒரு சமயம் தீயஆவி பிடித்திருந்த அர்தேமிஸ் என்ற சிறை அதிகாரியின் மகளிடமிருந்து பீட்டர் தீய ஆவியை விரட்டி அடித்ததால் அர்தேமிஸ் கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவருடைய குடும்பம் முழுவதும் கிறிஸ்தவ மறையைப் பின்பற்றச் செய்தார்.. இப்படிக் கிறிஸ்தவ மறையைத் தழுவிய அர்தேமிஸ் குடும்பத்தாருக்கு மார்செலினஸ்தான் திருமுழுக்குக் கொடுத்தார்.

இச்செய்தி அப்போது உரோமை அரசனாக இருந்த டயோக்ளசியனின் காதுகளை எட்டியது. உடனே அவன் வெகுண்டெழுந்து மார்செலினசையும் பீட்டரையும் கைது செய்து சிறையில் அடைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட இருவரும் சும்மா இருக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கு ஆண்டவருடைய நற்செய்தியைத் துணிச்சலோடு அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் பலரும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கினார்கள். இது மன்னனுக்குக் கடுமையான சினத்தை உண்டுப் பண்ணியது. இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக இவர்களைச் சிறையில் அடைத்தால் இவர்களோ அங்கேயும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்களா என்று அவர்கள் இருவரையும் இரவோடு இரவாகப் பிடித்து ஓர் அடர்ந்தக் காட்டிற்கு இழுத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் இருவரையும் அவர்களுக்கான கல்லறையைத் தோண்டச் செய்தான். கொடுங்கோலன் டயோக்ளசியன். அவர்கள் இருவரும் தங்களுக்கான கல்லறைக் குழியைத் தோண்டியபிறகு, மன்னன் அவர்கள் இவருடைய தலையையும் வெட்டி, அந்தக் கல்லறைக் குழிகளில் அவர்களைக் கிடத்தினான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்றுப் பகர்ந்துத் தங்களுடைய இன்னுயிரை அவருக்காகத் துறந்தார்கள்.

மார்செலினஸ், பீட்டர் ஆகிய இருவரும் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தித் திருத்தந்தை டாமாசுசுக்குத் தெரியவந்தது. அவர் அவர்களுடைய கல்லறைக்குச் சென்று உரிய மரியாதைச் செலுத்தினார். இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கொன்ஸ்டாண்டிநோபில் என்ற உரோமை மன்னன் அவர்களுடைய கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினான்.

ஆமென்