ஜூன் 15 புனிதர் வைட்டஸ் St. Vitus


மறைசாட்சி, தூய உதவியாளர்: (Martyr, Holy Helper)

பிறப்பு: கி.பி. 290 சிசிலி (Sicily)

இறப்பு: கி.பி. 303 (வயது 12–13) லூக்கானியா, தற்போதைய பசிலிகட்டா, இத்தாலி (Lucania, modern-day Basilica, Italy)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 15

பாதுகாவல்:

நடிகர்கள்; நகைச்சுவையாளர்கள்; ரிஜெக்கா (Rijeka), குரோஷியா (Crotia); செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia); நடனக் கலைஞர்கள்; நாய்கள்; வலிப்பு நோய் (Epilepsy); மஸரா டெல் வல்லோ (Mazzara del Vallo), சிசிலி (Sicily); அதிக தூக்கம் (Over Sleeping); ப்ராக் (Prague), செக் குடியரசு (Czech Republic); நரம்பு சம்பந்தமான ஒருவித தசை வலிப்பு நோய் (Rheumatic Chorea); தூய வைட்டஸ் நடனம் (Saint Vitus Dance); செர்பியா (Serbia); பாம்பு கடி (Snake Bites); புயல்கள் (Storms); வாச்சா (Vacha), ஜெர்மனி (Germany); செவன் (Zeven), லோயர் சாக்சனி (Lower Saxony); ஹெட் கூயி (Het Gooi), நெதர்லாந்து (Netherlands); இ க்ளாம்பஸ் வைட்டஸ் (E Clampus Vitus).

புனிதர் வைட்டஸ், கிறிஸ்தவ பாரம்பரியங்களின்படி, சிசிலி நாட்டின் கிறிஸ்தவ புனிதரும் மறைசாட்சியுமாவார்.

இவர், கி.பி. 303ம் ஆண்டு, தூய ரோம பேரரசை ஒன்றாக ஆண்ட இரண்டு பேரரசர்களான (Roman Emperors) “டயாக்லேஷியன்” மற்றும் “மேக்ஸ்மியன்” (Diocletian and Maximian) ஆகியோரின் ஆட்சியில் நடந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களின்போது மரித்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மத்திய காலத்திற்குரிய பதினான்கு தூய உதவியாளர்களில் (One of the Fourteen Holy Helpers) ஒருவராக கொள்ளப்படுகிறார்.

கிறிஸ்தவ பாரம்பரயங்களின்படி, புனிதர்கள் “வைட்டஸ்” (Vitus), “மொடஸ்டஸ்” (Modestus) மற்றும் “கிரெசென்ஷியா” (Crescentia) ஆகிய மூவரும் பேரரசன் “டயாக்லேஷியனால்” (Diocletian) துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.